|
இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹெக்கர்களால் ஊடுருவப்பட்டு சுமார் அரை மணி நேரம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதன் போது புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்றின் தலைவராக கருதப்படும் வீ.ருத்ரகுமாரின் புகைப்படம் அந்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கடந்த சனியன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து இராணுவ மட்டத்திலான உயர் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் போது தமது இணையத்தளம் எவ்வாறு ஊடுருவப்பட்டது, இணைய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இராணுவ தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊடுருவல் காரர்களின் பிடியில் இருந்து அரை மணி நேரத்தில் இணையத்தளத்தை மீட்டுள்ளதுடன் அதில் பதிவேற்றப்பட்ட ருத்ரகுமாரின் படம் உள்ளிட்ட தகவல்களையும் நீக்கியுள்ளது. இதனையடுத்து ஊடுருவல் காரர்கள் இராணுவ இணையத்தளத்தினுள் நுழைய பயன்படுத்திய இணையத்தள அடையாள இலக்கம் கண்டறியப்பட்டுள்ளதுடன் அதனூடாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இராணுவ இணையத்தளத்தின் பாதுகாப்பு குறித்து கூடுதல் அக்கறை காட்டப்பட்டுள்ளதாகவும் இதன் பொருட்டு இணைய பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் தற் சமயம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்தார்.
|
Tuesday, 29 December 2015
![]() |
இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ருத்ரகுமாரின் படம் ஊடுருவப்பட்டுள்ளது! |
Loading...
