கட்சியில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா; மகிந்த பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் என்ற ரீதியில் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதா அல்லது கட்சியை விட்டு விலகி புதிய கட்சியொன்றை தொடங்குவதா என்பதனை மகிந்த ராஜபக்சவே தீர்மானித்து, இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
அத்தோடு,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி தனியாக கட்சி ஆரம்பிக்கும் நியாயமான தேவை மகிந்த ராஜபக்சவிற்கு கிடையாது.
தனியாக கட்சி ஆரம்பிப்பது குறித்து மகிந்த ராஜபக்ச இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
