காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாட்டை நடத்தும் பிரான்ஸ், அதில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான காலக்கெடுவை வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு நீட்டித்துள்ளது.
புதிய பிரேரணையின்படி, பல சிக்கலான விசயங்கள் பாதியளவே தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு ஒப்பந்தம் உருவாக மேலும் சமரசப் பேச்சுக்கள் தேவைப்படுகின்றன.
உலக வெப்பநிலை அதிகரிப்பை 2 பாகை செல்சியஸுக்கு மட்டுப்படுத்துதல், ஆபத்தான நிலையில் உள்ள நாடுகளை பாதுகாக்க போதுமானது அல்ல என்று மாநாட்டில் கலந்துகொண்டோர் உடன்பட்டுள்ளனர்.
அந்த வெப்பநிலை அதிகரிப்பு 1.5 செல்சியஸுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வெப்பநிலை இலக்கை ஈடுகட்ட, நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள காபன் வெளியேற்ற வெட்டு போதுமானது அல்ல என்றும் அந்த பிரேரணை கூறுகின்றது.
