Friday, 11 December 2015

சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரைக் 'காணவில்லை'


Image copyrightReuters
Image captionகுவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர்

சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊகங்களும் பரவிவருகின்றன.
முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர்.
நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக அவரது ஃபோஸுன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பணியாளர்கள் சீன சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விற்பனையை இடைநிறுத்தி வைத்திருக்குமாறு ஹாங் காங் பங்குபரிவர்த்தனை நிர்வாகத்திடம் ஃபோஸுன் இண்டர்நேஷனல் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களை பின்னர் வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்டில், ஊழல் வழக்கு ஒன்றில் குவோ-வின் பெயரும் தொடர்புடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...