|
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தோதலுக்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கிய பதவிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.சிறிகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமயகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் யாப்பு விதிகள் நிச்சயமாக மாற்றியமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.காலத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சில பதவிகள் தற்போது ரத்து செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசியல் சானத்தைப் போன்றே, கட்சியின் யாப்பு விதிகளிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கட்சியின் செயற்குழுவிற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதன் அடிப்படையில் சில பதவிகளில் மாற்றங்களைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எந்ததெந்த பதவிகள் இவ்வாறு ரத்து செய்யப்படும் என தீர்மானிக்கப்படவில்லை எனவும் காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்த காலத்தில் தலைமைத்துவ பேரவை, இணைப் பிரதித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் கலத்திற்கு காலம் உருவாக்கப்பட்டு சிலருக்கு வழங்கபட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
|
Thursday, 24 December 2015
![]() |
உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்பாக ஐ.தே.கவின் சில முக்கிய பதவிகளில் மாற்றம் |
Loading...
