Wednesday, 2 December 2015

குயீசின் நிறுவனத்தின் அனுசரனையுடன் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் பாதணிகள் இலவசமாக பகிர்ந்தளிப்பு!

குயீசின் நிறுவனத்தின் அனுசரனையுடன்  பாடசாலை மாணவர்களுக்கு 
அப்பியாச கொப்பிகள் ääபாதணிகள் இலவசமாக பகிர்ந்தளிப்பு!

2016ஆம் கல்வி ஆண்டுக்காக பாடசாலை செல்லும் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள்; மற்றும பாதணிகள் போன்றவற்றை வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கொழும்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
கொழும்பு மருதானை டெம்பல் வீதி இலக்கம் 198 என்ற முகவரியில் இயங்கும் குயீசின் நிறுவனத்தின் அனுசரணையுடன்  நடைபெற்ற இந்த நிகழ்வில்ää ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபாகணேசன் பிரதம அதிதியாகவும் ääஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் தலைவரான கலாநிதி யூசுப் கே.மரிக்கார் கௌரவ அதிதியாகவும் கலந்துக் கொண்டதுடன் மாணவ மாணவிகளுக்கான அப்பியாசக்கொப்பிகள்; மற்றும பாதணிகள் போன்றவற்றையும் வழங்கி வைத்தனர்.
அத்தோடு வறிய மாணவ மாணவிகளின் நலன் கருதி தனிப்பட்ட ரீதியில் உதவ முன்வந்த குயீசின் நிறுவனத்தின் சிறந்த சேவையை முன்னாள் பிரதி அமைச்சரான பிரபா கணேசன்ää ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் தலைவரான யூசுப் கே.மரிக்கார ஆகியோரும்; வெகுவாக பாராட்டினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குயீசின் நிறுவன பணிப்பாளர் பாத்திமா ஸசீனா பாயிஸ் தனதுரையில் தமது நிறுவனம் மூன்றாவது தடவையாக இந்த நிகழ்வினை நடத்துவதாகவும் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டுமன்றி தமிழ் சிங்கள கிறிஸ்தவம் என அனைத்து இன மாணவர்களுக்கும் தமது நிறுவனத்தின் சேவைகள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குடும்பப்பெண்களுக்காக இலவச ஆங்கில வகுப்புகளையும் சலுகை கட்டணத்தில் சமையல் வகுப்புகளையும்  நடத்தி வரும் இந்த நிறுவனம்ää எதிர்காலத்தில் விதவையருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குதல் மற்றும் சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவோருக்கு நிதி உதவிகளை வழங்குதல் போன்ற  மேலும் பல சமூகநல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலவச கண் சிகிச்சை முகாம்ää வைத்திய முகாம் போன்றவற்றையும் கொழும்பில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றில் கலந்துக்கொள்ள விரும்புவோர் தமது நிறுவனத்தின் 0774302314 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குயீசின் நிறுவன பணிப்பாளர் பாத்திமா ஸசீனா பாயிஸ் கேட்டுக் கொண்டார். 
இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியாää முஸம்மில் மற்றும் தேசமான்ய மர்ளியா சித்தீக் ääபவாஸா தாஹா மற்றும் லயன்ஸ் கழகத்தைச்   ரஸீதா பானுää குயீசின் நிறுவனத்தைச்சேர்ந்த சஹாமா ஜவ்ஹர் ääகவிமணி நஜ்முல் ஹ{சைன்ää இளநெஞ்சன் முர்ஷிதீன் உட்பட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 
குயீசின் நிறுவனத்தின் அனுசரணையுடன்  பெண்களுக்காக நடைபெற்ற சமையல் வகுப்புகளில் கலந்துக் கொண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்நிகழ்வின் போது பரிசில்;களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல பாடசாவைகளின் மாணவ மாணவிகள் இந்த நிகழ்வின் போது அப்பியாசக்கொப்பிகளையும்  பாதணிகளையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை அறிவிப்பாளரான எஸ்.எம்.. கரீம் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்.

தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹ{சைன்







Loading...