Wednesday, 2 December 2015

கருந்துளை மீகோ என மாறியது

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள், ‘கருந்துளை’ ஒன்றிலிருந்து, ‘எக்ஸ் கதிர்கள் வெளிப்படுவதை இரண்டு விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் கண்டதாக சமீபத்தில் அறிவித்தனர்.
black-hole-sun-wont-you-come-2015-11-30-01-720x480











இது, இந்தியாவிலுள்ள ஹோமிபாபா தேசிய நிலையத்தில் தற்போது சிறப்பு பேராசிரியரான அபாஸ் மித்ரா, விண் வெளியில், கருந்துளை என்று ஒன்றே கிடையாது என்றும், இன்று விண் இயற்பியலாளர்களால் கருந்துளை என்று அழைக்கப்படுவது, உண்மையில் அதிபயங்கர வெப்பமும், மிதமிஞ்சிய காந்த சக்தியும் கொண்ட பிளாஸ்மா திரள்தான் என முன்பே அறிவித்திருந்தார்.

பிளாஸ்மா என்பது எலக்ட்ரான்கள் உரித்தெடுக்கப்பட்ட, அயனிமயமான வாயுத் திரள். ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் முடியும் தறுவாயில் படுவேகமாக சுருங்கத் துவங்கும். அப்படி சுருங்கும் நட்சத்திரத்தைத்தான் விண்வெளி இயற்பியலாளர்கள் கருந்துளை என்கின்றனர். இந்த கருந்துளை இராட்சதத்தனமான ஈர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். அதாவது அருகே கடந்து செல்லும் ஒளிக் கற்றையைக்கூட தன்னுள்ளே இழுக்கும் அளவுக்கு இதன் ஈர்ப்பு சக்தி அமைந்திருக்கும்.
பல்லாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட ஒரு நட்சத்திரம், எல்லையற்ற ஈர்ப்பு சக்தியால் முடிவிலியாக சுருங்க ஆரம்பிக்கும்போது, அதற்கு எதிர் வினையாக, அதிவெப்பமான அந்த நட்சத்திரத்திரத்திற்குள் இருக்கும் கதிர்வீச்சு வெளியே வந்தாக வேண்டும் என்று மித்ரா விளக்கம் தெரிவித்திருந்தார். ‘ஐன்ஸ்டீன் கணித்து சொன்ன கருந்துளைக்கு மாறாக, சுருங்கும் நட்சத்திரம் பெரும் தீப்பிளம்பாகவே இருக்கும் என்ற கருத்தை நாங்கள் முன்வைத்தோம்’ என்கிறார் மித்ரா. இதற்கு ‘முடிவில்லாமல் சுருங்கும் காந்தப்புலம் கொண்ட பொருள்’ அல்லது ‘மீகோ’ என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
மீகோவில் ஏராளமான வாயுக்கள் செறிந்திருக்கலாம் என்றும் மீகோவினுள் வாயுக்கள் அதிவேகமாக ஈர்க்கப்படுவதால் ஏற்படும் மிதமிஞ்சிய உராய்வின் காரணமாக எக்ஸ் கதிர்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது என்று அவர் கணிக்கிறார். ‘காந்தப்புலமும் வாயுக்களும் நிரம்பிய தீப்பந்துக்கு உதாரணம் சூரியன்தான்’ என்கிறார் மித்ரா. சூரியனில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்களால் சூரியப்புயல் என்ற விளைவும், கதிர்வீச்சு ஜுவாலைகளும் ஏற்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Loading...