Sunday, 10 January 2016

அனுமதிப்பத்திர கட்டணத்தால் ஏராளமான நிறுவனங்கள் மூடப்படும் நிலை

அனுமதிப்பத்திர கட்டணத்தால் ஏராளமான நிறுவனங்கள் மூடப்படும் நிலை
அனுமதிப்பத்திர கட்டணத்தால் ஏராளமான நிறுவனங்கள் மூடப்படும் நிலை
இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில், நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்துக்கு கட்டணமொன்று விதிக்கப்பட்டிருப்பதால் ஏராளமான நிறுவனங்கள் தங்களது பதிவை ரத்துசெய்யுமாறு கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளன.

திணைக்களத்தில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுவதற்கான அனுமதி வழங்கப்படுமென கம்பனிகள் பதிவாளர் நாயகம் சீ.என்.ஆர்.சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கான வருடாந்த அனுமதிக் கட்டணம் 5 இலட்ச ரூபாவாகவும், பொது நிறுவனங்களின் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவாகவும், தனியார் நிறுவனங்களுக்கான கட்டணம் 60 ஆயிரமாகவும், பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தந்த விவரங்களின் அடிப்படையில் இலங்கையில் மொத்தமாக 70 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரவு - செலவுத் திட்டத்தின் பின் அந்த நிறுவனங்களில் பெருமளவானவை தமது பதிவுகளை இரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் திகதி வரை ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றைத் தனித்தனியாகப் பரிசீலனை செய்த பின்னரே மொத்தமாக எத்தனை நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்படுமென்பதை   முடிவு செய்யலாம் என பதிவாளர் நாயகம் சிறிவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...