Saturday, 9 January 2016

சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய கட்சி உருவாக்கப்பட வேண்டும்

சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய கட்சி உருவாக்கப்பட வேண்டும்
சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய கட்சி  உருவாக்கப்பட வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலீடாக புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நன்மையை செய்யவில்லை எனவும், காவல்துறை இராச்சியமொன்றையே உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசியல் கட்சியொன்று அவசியப்படுவதாகவும் தெரிவித்துள்ளதோடு,அரசியல் தேவைகளுக்காக சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் குற்றச் செயல்களை கண்டு பிடிப்பதனை விடவும் பழிவாங்கல்களில் தீவிர முனைப்பு காட்டி வருவதாக  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...