|
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவுசெய்து வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்வோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை கையளிக்க முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 5 முதல் உயர்தரப் பரீட்சை எழுதுவது வரைக்கும் இந்த புலமைபரிசில் வழங்கப்படும். அது தொடர்பான தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.
|
