Sunday, 3 January 2016

நிசாந்த சிறி வர்னசிங்கவிற்கு மீண்டும் அமைச்சுப் பதவி













அண்மையில் மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிசாந்த சிறி வர்னசிங்கவிற்கு மீளவும் அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணசபையில் சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்த வர்னசிங்க சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர், அமைச்சுப் பதவியை இழந்தார்.

மாகாண முதலமைச்சர் இசுர தேசப்பிரிய சுகாதார அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், வெற்றிடமாகியுள்ள சுகாதார அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...