புதிய கட்சியின் தலைவராக பசில் நியமிக்கப்படுவதை எதிர்க்கும் நாமல்!
புதிய கட்சியின் தலைமப் பொறுப்பிற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவதனை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்த்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் உருவாக்கப்பட உள்ள புதிய கட்சியின் தலைமைப் பதவி பசில் ராஜபக்ஸவிற்கு வழங்கப்படக் கூடாது என நாமல் ராஜபக்ச கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டால் தாம் அந்தக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் புதிய கட்சியின் தலைவர் பதவிக்காக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எவ்வாறெனினும், கோத்தபாய ராஜபக்ச கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கோத்தபாய ராஜபக்ச புதிய கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதனை விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
