Sunday, 31 January 2016

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சரியான நிலைப்பாடு : கூட்டமைப்பு

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சரியான நிலைப்பாடு : கூட்டமைப்பு
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சரியான நிலைப்பாடு : கூட்டமைப்பு
புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய யாப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அரசாங்கத்திடம் முன் மொழிந்துள்ளதாகவும் சமஷ்டி முறையிலான தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதன் மூலம் முழுமையாக இனப்பிரச்சினையை தீர்த்து விடமுடியாது என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சம்பந்தன் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சந்தித்து புதிய அரசியல் யாப்பு தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார் என்றும் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் தெரிவித்தார்.

அதேவேளை சம்பந்தனுடன் அரசாங்கம் பேச்சு நடத்தும் என்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கம் தெரிவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள நகல் யோசனைகளை பரிசீலக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் அந்த உறுப்பினர் தெரிவித்தார்.

Loading...