மேசிடோனியா எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் கடந்து செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு படையினரிடம் அகதி ஒருவர் மண்டியிட்டு வேண்டுகிறார்.
பின்லாந்தை தொடர்ந்து சுவீடனு ம் தற்போது அகதிகளை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.
சிரியா, இராக், ஆப்கானி ஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர வன்முறைகளில் ஈடுபடு வதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிக ளாக வருகின்றனர். அவர்களுக்கு தஞ்சம் அளிக்கும் விஷயத்தில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்குள் கருத்து வேறுபா டுகள் நிலவுகின்றன. இதற்கிடை யில், ஆயிரக்கணக்கான மக்கள் ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன், பின்லாந்து உட்பட பல நாடுகளில் அகதிகளாக புகுந்துள்ளனர்.
இந்நிலையில், அகதிகளாக வந்தவர்கள் சட்டவிரோத நட வடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடந்ததால் ஐரோப் பிய நாடுகள் அதிர்ச்சி அடைந் துள்ளன. இதையடுத்து, அகதி களை திருப்பி அனுப்ப பின்லாந்து அரசு முடிவு செய்தது. இப்போது சுவீடன் அரசும் அகதிகளை திருப்பி அனுப்ப போவதாக அறிவித்துள்ளது.
பின்லாந்தில் அரசியல் தஞ்சம் கேட்டு கடந்த 2015-ம் ஆண்டு 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர் களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை பின்லாந்து அரசு திருப்பி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுகுறித்து பின்லாந்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொள்கை ரீதியாக 32 ஆயிரம் அகதிகளில் 65 சதவீதம்பேரை திருப்பி அனுப்ப உள்ளோம்’’ என்றார்.
அண்டை நாடான சுவீடன் உள்துறை அமைச்சர் ஆண்டர்ஸ் ஜிமேன் கூறுகையில், ‘‘அகதி களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசு யோசித்து வருகிறது. இப்போது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க ளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவெ டுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
கடந்த 2015-ம் ஆண்டில் சுவீ டனுக்கு ஒரு லட்சத்து 63 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வந்துள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப் பட உள்ளனர். இவர்கள் துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
