Sunday, 3 January 2016

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனை http://www.doenets.lk/result/alexamresult.jsf என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இதேவேளை, இந்த பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள்திருத்தம் செய்வதற்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பாக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்
1911
011 27 84 208 
011 27 84 537 
011 314 0 314 
011 3 188 350

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 69 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...