நில அதிர்வுகள் ஏற்படும் போது அதனால் ஏற்படும் இழப்புகள் மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், அது எந்த வகை நிலநடுக்கம் என்பதை அறிவதில்லை. நிலநடுக்கத்தின் வகைகளை குறித்த விவரங்கள்…
ஆண்டு தோறும் உலகில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
அதில் ஏறக்குறைய ஒரு லட்சம் நில நடுக்கங்கள் மக்களால் உணரப் படுவதாக புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நில நடுக்கங்கள் உருவாகும் விதத்தை வைத்து அவை மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
புவியின் உட்புறத்தில் ஏற்படும் நில நடுக்கம் வல்கானிக் என்று அழைக்கப்படுகிறது.
மலைப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தோன்றும் நிலநடுக்கம் டெக்டானிக் என்று அழைக்கப்படுகிறது.
கடலுக்கடியில் உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் சப்மாரின் என்று அழைக்கப்படுகிறது.
