Monday, 4 January 2016

சிங்க லே என்ற தலைப்பில் பேரினவாதிகளால் பரப்புரை : சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை தூண்டிவிட சதி!

சிங்க லே என்ற தலைப்பில் பேரினவாதிகளால் பரப்புரை : சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை தூண்டிவிட சதி!
 சிங்க லே என்ற தலைப்பில் பேரினவாதிகளால் பரப்புரை : சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை தூண்டிவிட சதி!
சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்ற இனவாதத்தை பரப்பும் வகையில், நாடு முழுவதும் சிங்கத்தின் இரத்தம் (சிங்க லே) என்று எழுதப்பட்ட ஸ்ரிக்கர்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

இதன் பின்னணியில் பேரினவாத சக்திகள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள இனப்பற்றுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களில் இந்த ஸ்ரிக்கர்களை ஒட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.குறித்த இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேர்ட்டுக்களும் விற்பனை செய்யப்ப டுகின்றன.

சமூக வலைத்தளங்களிலும் இந்த குறியீடுகள் பரப்பப்பட்டு லட்சக்கணக்கான விருப்பக் குறிகள் இடப்பட்டு திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறான பரப்புரைகள் எதிர் காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட கல வரங்களை தூண்டும் முன் ஆயுத்த நடவடிக்கை என்று சிவில் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உடலில் குறித்த சின்னத்தை பச்சை குத்தும் நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள பௌத்த வாதத்தை தூண்டும் இச்செயலை அண்மையில் அமைச்சர் ஹரின் பெணான்டோ கண்டித்திருந்தார்.

இதேவேளை. நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம்களின் வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்க லே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading...