பல கோடி ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள மத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக விமான நிலையத்தின் முக்கிய கருவிகள் பழுதடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக விமான நிலைய ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
விமானப் போக்குவரத்து தொடர்பிலான கருவிகள் தூசு மற்றும் சிறுபூச்சிகள் போன்ற நுண் உயிரினங்களின் படிவுகளின்போது கடுமையான சேதத்தை எதிர் கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்தொகை காரணமாக அங்கு பாரியளவில் எலிகளின் தொல்லை காணப்படுவதாகவும் இந்த எலிகள் முக்கிய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அவற்றுக்கான இணைப்புகளை சேதப்படுத்த தொடங்கியுள்ளதாக கூறியுள்ள அவர்கள் இதன் காரணமாகவும் பல கோடி ரூபா நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது அங்கு 5000 மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவை விரைவில் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
