Friday, 8 January 2016

ஹலால் சான்றிதழ் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிக்கை வெளியீடு

அண்மைக் காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷெய்க் முப்தி. றிஸ்வி அவர்களின் பெயரில் குறுஞ்செய்திகள் மற்றும் சமூகவலைத்தளங்களில் சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இவற்றில் சிலநிறுவனங்களின் உற்பத்திகள் ஹலால் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்கமறுத்துள்ளது என குறிப்பிடப்பட்ட குறித்த தகவல்கள் அனைத்தும் பொய்யான செய்திகள் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இது போன்ற பொய்யான தகவல்கள் பொருட்களின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே சில தீயசக்திகளால் முன்வைக்கப்படும் இவ்வாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2013.12.31முதல் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாட்டில் இருந்துஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாமுற்றாக நீங்கியுள்ளது என்பதையும் இது சம்பந்தமாக பொருட்களுக்காக ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்ப்பாடுகளை 

Accreditation Council (Guaranteed) Limited என்ற நிறுவனம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் அறியத்தருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ஹலால் தொடர்பான சந்தேகங்களுக்கு 011-7425225 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.


Loading...