தேசிய ரீதியில் உயர்தரப் பரீட்சையின் முதற்தரப் பெறுபேறுகள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் டசுன் ஜயசிங்க கணிதப் பிரிவிலும், கம்பஹா ரட்னவலி பாலிகா வித்தியாலய மாணவி உமேஷா கருணாவெல்லட உயிரியல் பிரிவிலும், அகில இலங்கை ரீதியில் முதலாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
அதேவேளை, குருநாகல் மலியதேவா பெண்கள் கல்லூரி மாணவி ஜீவா நயனமாலி மற்றும் குருநாகல் மலியதேவா ஆண்கள் கல்லூரி மாணவன் அகில் மொஹமட் ஆகியோர் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
