சட்டத்திற்கு முரணாக சுவரொட்டிகளை ஒட்டுகிறவர்களுக்கு எதிராக நடவடிக்கை
சட்டத்திற்கு முரணாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கான அதிகாரம் நகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மேலதிக வகுப்புக்களுக்கான விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு பதாதைகள், நாட்டின் சட்டத்தை மீறி, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்படுகின்றன.
இது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்பதுடன், சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
