|
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக வரவேற்கவுள்ளார். 2016ம் ஆண்டு மலர்ந்துள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக நவாஸ் ஷெரீபின் பயணம் அமைந்துள்ளது.
இலங்கைக்கு வருகைதரும் பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை 05 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு உத்தியோபூர்வ வரவேற்பு கோலாகலமாக அளிக்கப்படவுள்ளது. இவ்வரவேற்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளன.
இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் சுகாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள், கலாசாரம், நிதிமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகிய துறைகள் அடங்கலாகப் பல புரிந்துணர்ந்திணர்வு உடன்படிக்கைகள் கைச்சார்த்திடப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கும் அவர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி விஷேட விருந்துபசாரம் அளிக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான குழுவினருக்கு அலரி மாளிகையில் பகல்’போஷன விருந்துபசாரம் அளிக்கப்படவுள்ளது.
இதேவேளை மறுநாள் 06ம் திகதி கண்டிக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் தலதா மாளிகை, கண்டி மீராமாக்கம் பள்ளிவாசல், கண்டி ஜின்னா மண்டபம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்யவிருப்பதுடன் பேராதனை தாவரவியல் பூங்காவில் மரக் கன்றொன்றையும் நடவுள்ளார்.
|
Monday, 4 January 2016
![]() |
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று இலங்கை விஜயம்! |
Loading...
