வானிலை மாற்றம்!
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கபடுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
பிற்பகல் நான்கு மணியளவில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆரம்பிக்கும் மழை தொடர்ந்து, இடியுடன் கூடிய மழையாக மத்திய மற்றும் சப்ரகமுவை மாகாணங்களில் பரிணமிக்கும்.
அத்துடன், ஹம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
