கருவிலே உருவம் கொடுத்து
கண்ணிலே வெளிச்சம் கொடுத்து
சிந்திக்க அறிவை கொடுத்து
சிறந்த எண்ணங்கள் கொடுத்து
காதலெனும் உணர்வையும் கொடுத்தான்
இறைவன்.
காதலெனும் உணர்வையும் கொடுத்தான்
இறைவன்.
இதழ்களில் தேன்தடவி,
இனித்திட பேசி,
கண்களால் வலை வீசி,
காம வெறி கொண்டு,
பெண்களின் புனிதம் மறந்து,
துரோகமுட்களால் துவம்சம் செய்கிறான்
மனிதன்…..
இனித்திட பேசி,
கண்களால் வலை வீசி,
காம வெறி கொண்டு,
பெண்களின் புனிதம் மறந்து,
துரோகமுட்களால் துவம்சம் செய்கிறான்
மனிதன்…..
மலரென்று வர்ணித்து பெண்ணே உனை
மௌனமாக்கி விட்டான்……
அழகியென்று சொல்லி உனை
அழவைத்து விட்டான்….
உயிரே என்றழைத்து உனை
உருக வைத்துவிட்டான்….
விண்ணில் சிரித்திடும் நட்சத்திரங்கள் கூட
மண்ணுக்கு வந்துவிடும் இந்த
பெண்மையின் மென்மையறியா
மூடர்களை தண்டிக்க…..
மௌனமாக்கி விட்டான்……
அழகியென்று சொல்லி உனை
அழவைத்து விட்டான்….
உயிரே என்றழைத்து உனை
உருக வைத்துவிட்டான்….
விண்ணில் சிரித்திடும் நட்சத்திரங்கள் கூட
மண்ணுக்கு வந்துவிடும் இந்த
பெண்மையின் மென்மையறியா
மூடர்களை தண்டிக்க…..
பெண்ணே நீ
மேதையா இல்லை
பேதையா…..
நீ சிந்திக்க வேண்டிய நேரமிது. …
மேதையா இல்லை
பேதையா…..
நீ சிந்திக்க வேண்டிய நேரமிது. …
சிதறும் சிந்தனைகளை ஒன்றாக்கு
சிகரம் நோக்கிய உன் பயணத்துக்காக …
மனதின் எண்ணங்களை வலுப்படுத்து
மனிதமிருகங்களிடமிருந்து விடுதலை பெற. …
உன் மீதே நீ நம்பிக்கை கொள்….
உருகி உருகி எவன்
உயிர் விடத் துடித்தாலும்
கருணை கொள்ளாதே…..
சுதந்திரமாய் முடிவெடு
சோர்ந்திடாமல் போராடு…
சுடர்விடும் ஒளியாய் பிரகாசித்திடு
சிகரம் நோக்கிய உன் பயணத்துக்காக …
மனதின் எண்ணங்களை வலுப்படுத்து
மனிதமிருகங்களிடமிருந்து விடுதலை பெற. …
உன் மீதே நீ நம்பிக்கை கொள்….
உருகி உருகி எவன்
உயிர் விடத் துடித்தாலும்
கருணை கொள்ளாதே…..
சுதந்திரமாய் முடிவெடு
சோர்ந்திடாமல் போராடு…
சுடர்விடும் ஒளியாய் பிரகாசித்திடு
இணையவள்
