Tuesday, 26 January 2016

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்

பெண்கள் தங்கள் சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பல கீரிம்களை உபயோகிப்பதால் தோல் வரண்டு, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கைப் பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வைத் தந்திருக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் நீக்க வல்லது.

tomatoes-293x300
தக்காளி: சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்துக்குப் பேஸ் பேக் போடலாம்.

news4-300x220
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்துக்கு பேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

images
தயிர்: தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்துக்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.

15-1450158496-5-egg-mask
முட்டை மற்றும் தேன்: மற்றொரு சந்தன பேஸ் பேக் தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியைச் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

bo752
மஞ்சள் தூள்: சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

03-1391421194-gramflour
முல்தானி மெட்டி: சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து பேஸ் பேக் போடலாம். அதற்கு அரைக்கரண்டி முல்தானி மெட்டி மற்றும் அரைக்கரண்டி சந்தனப் பொடியைச் சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

rosewatter
ரோஸ் வோட்டர்: பொதுவாக சந்தன பேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வோட்டரில் கலந்து, சருமத்துக்குத் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.




Loading...