Sunday, 3 January 2016

தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு

தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐ.தே.க எதிர்ப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் முறையில் மாற்றம் செய்து தேர்தலை நடாத்த காலம் எடுக்குமாயின் பழைய முறையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படுவது ஆறுமாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட எல்லை நிர்ணயங்கள், சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு அமைவானதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தப் பிழைகளை திருத்தி புதிதாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ள குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தேவைப்படும்.

தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் தீர்மானம் எடுக்கும் அதிகாரம், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இதேவேளை, ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தேர்தல் நடாத்துவது குறித்து தீர்மானிப்பார்கள் என கபீர் ஹாசீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Loading...