Sunday, 3 January 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் போது வைத்தியர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இதன்காரணமாக வரவு செலவுதிட்ட ஆலோசனைகளில் இரத்துச் செய்யப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

வைத்தியர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை மீண்டும் வழங்க பிரதமர் தீர்மானித்ததை தொடர்ந்தே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை வழங்க முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.

Loading...