Thursday, 14 January 2016

முக்கிய அமைச்சர்கள் மாலைதீவு விஜயம்

முக்கிய அமைச்சர்கள் மாலைதீவு விஜயம்
முக்கிய அமைச்சர்கள் மாலைதீவு விஜயம்
வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்று மாலைதீவு சென்றுள்ளனர்.எனினும், இந்த விஜயத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர முறுகலை தீர்க்கும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் இலங்கையர் ஒருவர், மாலைதீவில் கைது செய்யப்பட்டமை,மாலைதீவின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டமை போன்ற சம்பவங்களின் பின்னணியிலேயே இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது .
Loading...