|
தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க முடியாது.
அரசியலமைப்பின் பிரகாரம் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறில்லாது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
Saturday, 30 January 2016
![]() |
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் தேசத்துரோகம் ! - எச்சரிக்கிறார் கம்மன்பில |
Loading...
