Monday, 29 February 2016

ஐ.நா பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
 ஐ.நா பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர்.

இன்றையை முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். இதன்போது இலங்கை  விஜயம்  தொடர்பான விரிவான விளக்கமொன்றை ஐ.நா ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.இதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களையும் முன்வைக்கவுள்ளன.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென பிரேரணை நிறைவேற்றப்பட்டது.இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை 31ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...