Monday, 29 February 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏன் சர்வாதிகாரமான முறையில் ஒரு ஆடையணியும் ஒழுங்குமுறையை திணிக்கிறது

                                              ரூபா ரட்னசிங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தினால் மாணவர்களுக்கான ஒரு புதிய ஆடை அணியும் ஒழுங்கு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது இந்து கலாச்சார விதி முறைகளை இதர சமூகத்தjaffna uniை சேர்ந்த மாணவர்கள் மீதும் வலியுறுத்துவதைப் போலத் தெரிகிறது. இந்த ஆடை ஒழுங்கு, தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் மத்தியில் இனவாதம் மற்றும் சாதியம் தலைதூக்கி வருகின்றதா என்பதைப் பற்றிய ஒரு விவாதம் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விடயத்தைப் பற்றிய ஆர்வம் தீவிரமாகியுள்ளது என்பதற்கு அதைப்பற்றி கிட்டத்தட்ட 300 கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டிருப்பது சான்று பகருகிறது.
அந்தக் கட்டுரையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஒரு நுணுக்குக்காட்டியின் கீழ் வைத்து நோக்கப்படுகிறது, அதனால் பல்கலைக்கழக அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ஒருவர் நினைக்கக் கூடும். மாறாக அவர்கள் தாங்கள் பல கலாச்சாரங்களின் நிறுவனமான பல்கலைக்கழகத்தின் ஒரு பங்காளிகள் என்பதைப் பொருட்படுத்தாமல் தாங்கள் விரும்பியதையே செய்வோம் என உலகத்துக்கு தெரிவிக்கிறார்கள் போலத் தெரிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி அலுவலகம் இந்த சர்ச்சைக்குரிய ஆடை ஒழுங்கை கல்வி சார் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு ரெலிகிராப் விவாதத்திற்கு, பல்கலைக்கழகம் மற்றவர்களை ஒதுக்கிவிட்டு தான் மிகவும் இந்து மதம் சார்பானது எனக் காண்பிக்க விரும்புவது போலத் தெரிகிறது. கலைப் பீடத்தின் 17.02.2016 திகதிய ஆடை ஒழுங்குமுறை, பல்கலைக்கழக பேரவையின் உத்தரவையும் அதைத் தொடர்ந்து 16.02.2016 காலை 11 மணியளவில் இடம்பெற்ற திணைக்கள தலைவர்களின் கூட்டத்தையும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டதாகும். இந்த புதிய உத்தரவு தெரிவிப்பது:
1.கல்வி சார் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள், டெனிம் ஆடைகள் மற்றும் ரீ – சேட்டுகள் என்பனவற்றை விரிவுரைகளின்போது அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
2.அடுத்த வெள்ளியும் மற்றும் அதன்பின் வரும் ஒவ்வொரு வெள்ளியும் பெண்கள் விரிவுரைகளுக்கு சேலை அணிந்து வரவேண்டும் மற்றும் ஆண்கள் விரிவுரைகளின் போது தாடியுடன் காட்சியளிக்கக் கூடாது.
கலைப் பீடத்தில் மாத்திரம் 600க்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் உள்ளதாகத் தெரிகிறது, அவர்களின் மஜ்லிஸ் அமைப்பு அவர்களின் மதக் கட்டயாங்களான தாடி மற்றும் புர்கா அணிவதை தடைசெய்வதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றவர்கள் அவர்களின் சொந்த மத விசுவாசிகள்கூட ஏன் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அணியவேண்டும் எனக் கேட்கிறார்கள். அங்க வடிவமைப்பையும் மற்றும் வயிற்றுப் பகுதியையும் புடவை அநாகரிகமாக அம்பலப்படுத்துகிறது எனப் பெண்கள்( குறிப்பாக விரிவுரையாளர்கள், அவர்கள் பலகையில் எழுதுவதற்காக தங்கள் கைகளை உயர்த்த வேண்டியுள்ளது) கருதுகிறார்கள் மற்றும் மிகவும் ஒழுக்கமான மேல் சட்டை மற்றும் நீளமான பாவாடையையும் விரும்பும் அவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஆடை ஒழுங்குமுறையை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இந்த ஆடை ஒழுங்குமுறை ஆணையில் கையெழுத்திட்டுள்ள பீடாதிபதி என்.ஞ}னக்குமாரன் அவரது சகோதரரும் மற்றும் முன்னாள் கொழும்பு சட்டபீட பீடாதிபதியுமான செல்வக்குமாரனின் கோரப்படாத கடிதமொன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். அவரும் அவரது சகோதரரும் மூத்த இசை விரிவுரையாளரான கலாநிதி எஸ்.ஆர்.தர்ஷன், மாணவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற பரவலான பாலியல் தொந்தரவுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நிலுவையில் உள்ள விசாரணை காரணமாக இடைநீக்கம் செய்யப் பட்டிருப்பதற்கு எதிராக விவாதம் நடத்தியுள்ளார்கள். எனினும் அந்த மனுவை பேரவையில் வாசித்தபோது மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஞ}னக்குமாரன் அடுத்த கூட்டத்திலேயே அந்தக் கடிதத்தை திரும்பப் பெற்றுள்ளார், ஏனென்றால் அந்த இரண்டு சகோதரர்களுக்கும் மிகவும் அவமானம் உண்டானதை அது நிரூபித்தது. இன்னும் இதில் தங்கியுள்ள உண்மை என்னவென்றால் பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காமவெறியனான ஒரு கல்விமானிடமிருந்து மாணவிகளைக் காப்பாற்றுவதற்கு பேரவை முயன்றபோது, அவர்மீதான இடைநீக்கத்தை விலக்குவதற்கு முயற்சிசெய்த பீடாதிபதி ஞ}னக்குமாரன், அப்போது மாணவியரின் பாதுகாப்பில் அக்கறை செலத்தவில்லை, ஆனால் திடீரென இந்த மனிதர் அவர்களை சேலை அணியும்படி கட்டாயப்படுத்தி அவர்களை சுத்தமாக்க முயற்சிப்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. உண்மையில் பெண்களின் கண்ணியம் மற்றும் துஷ்பிரயோகத்தில் இருந்து விடுதலை என்பனவற்றில் அவர் கொஞ்சம் அக்கறை காட்டுவது போலத் தெரிகிறது.
ஹர்த்தால் கலாச்சாரம் யாழ்பாணத்திற்கு திரும்பியதிலிருந்து, பல்கலைக்கழகம் ஒரு இனக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறதா? 25 பெப்ரவரி, 2016 சி.என்.என் இனது தமிழ் செய்தி அறிக்கை ஒன்று முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் கிளறிவிடப்பட்டிருப்பதாக அறிவுறுத்துகிறது: “யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் செவ்வாயன்று  விசாரணை அறிக்கையை ஐநா இடைநிறுத்தியதைக் கண்டித்தும் அதை உடனடியாக வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒரு அமைதியான ஊர்வலத்தை நடத்தியது. பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார்கள், ஆனால் முஸ்லிம் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை”. முன்னர் வெளியான ஒரு அறிக்கையின்படி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முஸ்லிம் மாணவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக பயன்படுத்தி வந்த திருநெல்வேலியில் உள்ள பிரார்த்தனை அறைக்குள் இரவு நேரத்தில் சில அநாமதேய நபர்கள் உட்புகுந்து கழிவு இயந்திர எண்ணெயை ஊற்றி சூறையாடல் நடத்தி அந்த வளாகத்தை மாசுபடுத்தியுள்ளார்கள். பல்கலைக்கழக கல்வியின் பொது நடத்தைகளுக்கு பொறுப்பான அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தயவுசெய்து இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் அதன் தேசிய கொள்கை ஐக்கிய ஸ்ரீலங்காவுக்குரியதாக மாறியது, இங்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறீஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய அனைவரும் சமமானவர்கள் மற்றும் அவர்களின் விசுவாசம் மற்றும் கலாச்சாரம் என்பதற்கு ஏற்ப வாழ்வதற்கு உரித்துடையவர்கள் - பெரும்பான்மைவாத மேலாதிக்க பகிர்ந்தளிப்புகளின் ஆணைகளுக்கு கீழ்படிந்து அல்ல.
கேம்பிரிட்ஜ் மற்றும் எம்.ஐ.ரி பின்னணியுள்ள ஒரு சிங்கள கல்விமான்  அவரது பல்கலைக் கழக குழுவினருடன் (67ஃ68 போராதனை பொறியியல்பீடம்) மீண்டும் கூடும் நோக்கில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சமயத்தில் கடந்த 24ல் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு விஜயம்; செய்ய முயற்சித்துள்ளார் ஆனால் அவர் கட்டைக் காற்சட்டை அணிந்திருந்த காரணத்தால் பாதுகாப்பு காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதன்படி ஆடைக் குறியீடு கலைப்பீடத்தினரால் குறைந்தது ஒரு வார காலத்துக்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. இருப்பினும் உபவேந்தரிடம் 26ந்திகதி காலை இந்த பாகுபாடு பற்றி வானொலியில் நேர்காணல் நடத்தப்பட்டபோது, அது பேராசிரியர் ஞ}னக்குமாரனின் தவறு என்றும் மற்றும் பீடாதிபதியினால் கூறப்படும் கோரிக்கைகள் பற்றி பேரவையில் எந்த முடிவும் மேற்கொள்ளப் படவில்லை என்றும்  தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் அவர்கள் மதத்துக்குரிய ஆடைகள் அணிவதற்கும் தாடி வளர்ப்பதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என அவர் தெரிவித்தார். முஸ்லிம் அல்லாதவர்கள் சேலை அணிவதற்கும் மற்றும் தாடி வளர்ப்பதற்கும் உரிய தடை தொடர்ந்து அமலில் இருக்குமா என்பது பற்றி அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.
பகிடி வதை சமயத்தில் புதியவர்கள் மீது சர்வாதிகரமான ஆடை ஒழுங்கு முறையை திணித்த காலம் இருந்தது. ஆனால் தற்போதைய அடிப்படைவாதத்தை திணிப்பதற்கு நிருவாகத்தினருக்கு என்ன உரிமை உள்ளது. எங்கள் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுயமாக சிந்திப்பதற்கும் மற்றும் வாழ்வதற்கும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களை உண்மையிலேயே சுயமாக இருக்க விடவேண்டும்.
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Loading...