வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
தாய்லாந்து மற்றும் பாங்கொக்கிற்கு கடந்தவிருந்த வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கோடியே 26 இலட்சத்து 79 ஆயிரத்து 490 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவருமே இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத் தாள்களில் 80 ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்களும் 6 ஆயிரம் சுவிஸ் பிராங்கும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
