Tuesday, 2 February 2016

தமிழ் மக்களின் உரிமைகளை ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்

தமிழ் மக்களின் உரிமைகளை ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்
தமிழ் மக்களின் உரிமைகளை  ஒன்றிணைந்து  வலியுறுத்த வேண்டும்
தமிழ் மக்களின் உரிமைகளை அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பிற்கான அரசாங்க பிரதி நிதித்துவ ஆணைக்குழுவிற்கு மக்களால் முன்வைக்கப்பட வேண்டிய அடிப்படை தீர்வு விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

முல்லைத்தீவு - கரைதுரைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர், அரசாங்க பிரதிநிதித்துவ ஆணைக்குழுவிற்கு அனைத்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், மக்களும் ஒன்றிணைந்து மக்களுடைய தீர்க்கப்படாத அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

அத்தோடு, இதுவரைகாலமும் அடக்கப்பட்டு மறுக்கப்பட்ட உரிமைகளை வலியுறுத்தியும், நீண்ட காலமாக உரிமைகளுக்காக போராடும் இனம் என்ற அடிப்படையிலும் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் எனவும், இந்த அரசாங்கம் அடுத்துவரும் சந்ததியினரை சுதந்திரமாகவும்,  அமைதியாகவும் வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும்  அவர் மேலும் கூறினார்.

நிகழ்வில் மக்களுடன் அரசியல் அமைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடுகள் அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, உரிமைகள் மீதான சட்டம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


Loading...