Saturday, 20 February 2016

குழப்பம் விளைவித்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்

குழப்பம் விளைவித்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்
குழப்பம் விளைவித்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த ஐந்து பிக்குகளையும் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப் படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேர தெரிவித்தார். 

குறித்த ஐவரும் நேற்று வெள்ளிக்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.  

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் கைது செய்யப் பட்டமையை கண்டித்து கடந்த மாதம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச் சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...