Thursday, 25 February 2016

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வடக்கு  மற்றும் கிழக்கில்  3000 வறிய குடும்பங்களின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் அமைப்பு வாழ்வாதார உதவி புரிந்து வருவதாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், உணவு பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும், யு.எஸ்.எயிட் அமைப்பு உதவி புரிகின்றது. இலங்கை அரசாங்கம், உள்ளூராட்சி மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,போரினால் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கான உதவிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் அவர்களது புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் யூஎஸ்எயிட் உதவி புரிந்து வருகின்றதுஎன குறித்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...