மாகாண சபைகளை கிள்ளுக்கீரைகளாக நடத்தும் மத்திய அரசாங்கம்
மத்திய அரசாங்கம் மாகாண சபைகளை கிள்ளுக்கீரைகளாக நடத்தி வருவதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் வெளிநாடுகளுக்குச் சென்று அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் பாரிய பரப்புரைகளை முன்னெடுக்கின்றது. ஆனால், மாகாண சபைகளை நடத்திச் செல்வதற்கான நிதியைக் கூட தற்போது அதிகாரத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம் வழங்கத் தயராக இல்லை.
தற்போதைக்கு மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு உரிய நிதியை வழங்காத காரணத்தினால் மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச கூட இதுபோன்று பராமுகமாக நடந்து கொண்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
