கல்வியறிவைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம்
சிறந்த கல்வியறிவைக் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் களுத்துறை மகளிர் கல்லூரியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எனவே,புதிய அரசாங்கம் என்ற வகையில், கல்வித் துறைக்கு நாம் கடந்த காலத்தை விட அதிக நிதியை ஒதுக்கியுள்ளோம். இதன்மூலம் சிறந்த கல்வியறிவைக் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.
அத்தோடு,கல்விக்கு அதிக வசதிகளை பெற்றுக்கொடுப்பது, எமது நாட்டின் எதிர்காலத்திற்கான நீண்டகால முக்கிய முதலீடாக அமையும். நாட்டு மக்களை கல்வியறிவால் மேம்படுத்துவதன் மூலமே, நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இவையே உண்மையான அபிவிருத்தியாக அமையும். மகத்தானவர்களாக உலகில் முன்னோக்கிச் செல்வதற்கு இதுவே சிறந்த முதலீடாகும்.
