ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகிறார் நாமல்?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் உள்ளகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்சவை சுதந்திரக் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி ஆகியோர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் பசில் ராஜபக்சவிற்கும் உயர் பதவி ஒன்றை வழங்குவது தொடர்பில் இந்த கலந்துரையாடல்களின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
