Saturday, 20 February 2016

மூன்றாம் நிலைத் தலைமைப் பதவிக்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர்

மூன்றாம் நிலைத் தலைமைப் பதவிக்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர்
மூன்றாம் நிலைத் தலைமைப் பதவிக்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர்
ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்றாம் நிலைத் தலைமைப்பதவிக்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இளைய திறமையான தலைவர்களுடன் கட்சியை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இது தொடர்பிலான கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.இதற்காக இளைஞர் யுவதிகளின் கருத்துக்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

கட்சியை மறுசீரமைக்கும் போது கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இதன்படி,கட்சியின் மூன்றாம் நிலைத் தலைமைப் பதவிக்கு திறமையான இளைஞர்களை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கட்சியில் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்களை உருவாக்கியிருந்தார்.பிரேமதாசவை தலைவராகவும், லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோரை அடுத்த கட்ட தலைவர்களாகவும் ஜயவர்தன தெரிவு செய்திருந்தார்.

முச்சக்கர வண்டியில் முன் சில்லைப் போன்று பிரேமதாசவும் ஏனைய இரண்டு சில்லுகளைப் போல லலித் மற்றும் காமினி ஆகியோரும் செயற்பட்டனர்.என்னை உபரி சில்லாகவே அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தன பயன்படுத்தினார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

மேலும், கட்சி பிளவடைந்து செல்லாது தடுக்க முடிந்தமையைக்  குறித்து  மகிழ்ச்சி அடைகின்றேன் என பிரதமர் தெரிவித்தார்.
Loading...