நாடு முழுவதும் மின்தடை!
இலங்கை முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 நிமிடங்களாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என இலங்கை மின்சார அறிவித்துள்ளது.
மின்சார இணைப்பை மீளவும் வழமை நிலைக்குக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.