Friday, 12 February 2016

முஸ்லிம் கட்சிகளின் கூட்டு அமைப்பு பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் இஸ்தாபகர் மொஹிடீன் பாவா

முஸ்லிம் கட்சிகளினால் அமைக்கப் படப் போகும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு அமைப்பு பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் இஸ்தாபகர் மொஹிடீன் பாவா விடம் அவரது கருத்தைக் கேட்ட போது அவர் பின்வரும்மாறு தனது கருத்தை தெரிவித்தார் 

மக்களை ஏமாற்றும் மற்றும் ஒரு சதித் திட்டம்தான் இந்த முஸ்லிம் கூட்டு அமைப்பு .மக்கள் தற்போது அரசியலில் விழித்து  விட்டார்கள் மட்டும் அல்ல தங்களது இயலாமைகளும் வெளித்து  விட்டது ,இனிமேல் இவர்கள் தங்களை புறம் தள்ளி  புது முகம்கள்  வரக் கூடும்  என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் ஓன்று சேர்ந்துதான் ஏமாற்றலாம் என்பதுதான் இந்த திட்டம். இதை மக்கள் உணரவேண்டும் சோரம் போகவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் .

மேலும் கூறுகையில் இப்போது சகல அதிகாரம்களையும் தம் வசம் உள்ள போது மக்களுக்கு சேவை செய்யாதவர்கள்   கூட்டுச் சேர்ந்து செய்வார்கள் என்பது நகைப்புக் கிடமானது  என்றார் .

மேலும் தெரிவிக்கையில் ஆனால் வரும் காலத்தில் தற்போது அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒருவர் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது .
Loading...