Friday, 12 February 2016

அம்பாறை மாவட்ட நெற் களஞ்சியசாலை




எமது அம்பாரை மாவட்ட விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வந்த களஞ்சிய சாலையின் பிரச்சினையை தீர்த்துவைக்குமுகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியானது கடந்த 2015 டிசம்பர் 21 ம்திகதி அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பிவைத்த பிரேரணையை ஏற்றுகொண்டு அதனை தீர்த்துவைக்க முன்வந்திருக்கும் அரசாங்கம் எங்களுக்கு பச்சை கொடியை காட்டியுள்ளது என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இலங்கையில் அதிக நெல்லை உற்பத்தி செய்யும் எமது அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க மக்கள் பிரதிநிதிகள் திராணியற்று இருந்த போது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எடுத்திருக்கும் இந்த ஆரம்பகட்ட சேவை வெற்றியளித்திருப்பதை போன்று மேலும் பல திட்டங்களை வகுத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை இங்கு தெரிவித்துவைக்க விரும்புகிறோம்.

இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க எங்களுடன் கைகோர்த்து நின்ற சகல உறவுகளுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


சம்பந்தப்பட்ட செய்தி :



ஊடகப் பிரிவு

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசு
Loading...