|
மனதை மயக்கும் மணம் கொண்டது தாழம்பூ. தாழம்பூ மயக்கும் மணம் மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.
உடலில் சில சமயங்களில் பித்த நீர் இரத்ததில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தமடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த தாழம்பூவை காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.
உணவின் மாறுபாட்டாலும் நேரம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பொருமல் ஏற்படுகின்கிறது. இதை போக்க தாழம்பூவை நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பெருமல் குணமாகும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து சுறுசுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பலாக திரிவார்கள்.
இந்தக்குறையை போக்க தாழம்பூவை தீநீர்(சித்த மருத்துவபடி எடுக்கப்படும் நீர்) எடுத்து அருந்தினால் குணமாகும். உடல் சூடானால் வெப்ப நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். அல்லது பூவை மணப்பாகு செய்து குடித்து வந்தால் உடல்சூடு குணமாகும்.
தாழம்பூவிலிருந்து தாழம்பூ தைலம் வடிக்கலாம். இந்த தைலம் தலைவலி, உடல் வலி உள்ளவர்களுக்கு மேல் பூச்சாக தடவினால் உடல் வலி தலைவலி நீங்கும்.
|
Tuesday, 2 February 2016
![]() |
மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்ட மனதை மயக்கும் மணம் கொண்ட தாழம்பூ |
Loading...
