வழமைக்குத் திரும்பியது மின்துண்டிப்பு
இலங்கை முழுவதும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஏற்பட்ட மின் துண்டிப்பு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பொல்பிட்டி உபபொல ஊடாக கொழும்பிற்கு மின்விநியோகம் இடம்பெறும் 33 ஆயிரம் வோல்டேஜ் பலத்தை கொண்ட கட்டமைப்பின் சில பகுதிகள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தது. இதன் காரணமாகவே மின் துண்டிப்பு ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
