கட்சி ஒழுக்க விதிகளை மீறியவர்களை மன்னிக்க முடியாது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியவர்களை மன்னிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகலவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறினால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை எனவும், கட்சியைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
