Monday, 22 February 2016

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் எமக்கு வேண்டும் !













முஸ்லிம்களுக்கான நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் தேவை என்பதை ஒருபோதும் முஸ்லிம்கள் கைவிட முடியாதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பு முன்மொழிவு தொடர்பான கலந்துரையாடல் காத்தான்குடிப் பிரதேசத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில், 'எப்போதும் அரசியல் கோட்பாட்டு ரீதியாக முஸ்லிம்களுக்கான நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணத் தனி அலகு என்பதை கைவிட முடியாது.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட முஸ்லிம்களுக்கான முஸ்லிம் மாகாண அலகு என்ற கோரிக்கையிலிருந்து கீழிறங்குவது என்பது அரசியல் புத்திசாலித்தனமல்ல' என்றார். 'சுயநிர்ணய உரிமையையே தமிழர்கள் ஆகக்கூடுதலாக கேட்டது.

அதிலிருந்து அவர்கள் கீழிறங்கவில்லை. அக்கோரிக்கையை கைவிடவுமில்லை. தமிழர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டையும் கைவிடவில்லை. இது அவர்களின் அரசியல் உபாயம் அல்லது அரசியல் கோட்பாடெனக் கூறமுடியும்
Loading...