கல்முனையில் நவீன வசதிகள் கொண்ட உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றினை அமைப்பதின் மூலம் நமது வரும் கால இளைஜர் சமூதாயம் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் அவர்களது திறமைகளை வெளிக் கொணர வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.இவ்வாறன அரங்கு இப் பிர தேசத்தில் இல்லாமை பெரும் குறை பாடே.தற்போது விளையாட்டுத் துறை மதிப்புக் குரிய உதவி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் இதை அமைத்துக் கொடுப்பதில் எதுவித சிரமமும் இல்லை என்பதே என் கருத்து .
Badminton , Table Tennis ,Bowling ,Billiards etc போன்ற விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள இளைஜர்கள் இவ்வரங்கை அமைப்பதுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உங்கள் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என எதிர் பார்கின்றேன்
இவ் வரங்கில் நீச்சல் தடாகம் ஓன்று அமைப்பதும் கவனத்தில் கொள்ளப் படல் நன்று என நான் கருதுகிறேன் .
இது பற்றி நான் உதவி அமைச்சருக்கு ஒரு வேண்டு கோளை அனுப்பவுள்ளேன்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா


