|
ஐரோப்பிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்த 400 தீவிரவாதிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பயிற்சி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் நடந்த தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலைப் படைகளை கண்காணித்து வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உளவுத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தாக்குதல் நடத்த 90 பேர் ஊடுருவியதாகவும், அவர்களில் ஒரு சிலரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
|
