Thursday, 24 March 2016

தீவிரவாதிகளின் ஆதிக்கம் சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது: இஸ்ரேல் பிரதமர்


துருக்கி குண்டு வெடிப்பில் உயிரிழந்த 3 இஸ்ரேலியர்களின் உடல்கள் இஸ்ரேல் வந்துள்ள நிலையில், உலகில் தீவிர வாதத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார். துருக்கி குண்டு வெடிப்பில் காயமடைந்த இஸ்ரேலியர்கள் தனி விமானம் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குண்டு வெடிப்பில் உயிரிழந்த 3 இஸ்ரேலியர்களின் உடல்கள் பென் குரியன் நகருக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தன. இந்த உடல்கள் இறந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிலையில், உலகில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
Loading...