Wednesday, 16 March 2016

பிரதமரின் முயற்சிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்

பிரதமரின் முயற்சிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்
 பிரதமரின் முயற்சிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்
நாட்டை அபிவிருத்தி செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு  அவசியம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களின் நிலைப்பாடுகளை மதித்து நாட்டை அபிவிருத்தி செய்ய இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரைச் சுற்றியிருப்பவர்கள்  தற்போதைய அரசாங்கத்தால்  நாட்டில் மேற்கொள்ளப்பட்டு  வரும் அபிவிருத்தி மற்றும் சமூக கலாசார முன்னேற்றத்திற்கு தடையேற்படுத்தி வருகின்றனர்.நாட்டைப்  புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற போது திறைசேரியின் கஜானா காலியாக இருந்தது. ராஜபக்ச அரசாங்கம் நாட்டை கடன் பொறியில் சிக்க வைத்திருந்தது என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading...